தென்காசி: புளியங்குடி நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த விஜயா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள புளியங்குடி நகராட்சித் தலைவர் பதவியானது, அந்த இனத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படாமல், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விஜயாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து புளியங்குடி நகராட்சி அலுவலகம் அருகே பாஜக மாவட்டச் செயலாளர் ராமராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக நகரத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Video: அதிமுகவைப் பற்றி சசிகலா சொன்னது என்ன தெரியுமா?