ETV Bharat / state

கடையம் அருகே வடமாநிலப் பெண்ணுக்கு வளைகாப்பு விழா - கறி விருந்து, ஆட்டத்துடன் கொண்டாட்டம்!

கடையம் அருகே வடமாநிலப் பெண்ணுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வடமாநிலத்தொழிலாளர்கள் கலந்துகொண்டு, சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Etv Bharat வடமாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா

author img

By

Published : Mar 16, 2023, 5:03 PM IST

வடமாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா

தென்காசி: கடையம், அம்பை, ஆழ்வார்குறிச்சி உள்ளிட்டப் பகுதிகளில் ஏராளமானோர் சிறு தொழில்கள் செய்து வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகப்படியானோர் செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்த செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலை அதிகப்படியான பொதுமக்கள் நம்பி வாழ்கின்றனர். மேலும் இந்த செங்கல் சூளை பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் இந்தப் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. குறிப்பாக, இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் அருகேவுள்ள வடக்கு மடத்தூர் என்ற கிராமத்திலுள்ள பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி, செங்கல் எடுக்கும் பணிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

அந்த சூளையில் வேலை பார்த்து வரும் பொறி - தோனியம்மா என்ற தம்பதி, திருமணம் செய்து தற்போது தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு நேற்று (மார்ச் 15) வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடையம், கோவிந்தபேரி, முக்கூடல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வரும் அவரது உறவினர்கள் வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களது சடங்குப்படி வளைகாப்பு விழா நடைபெற்றது.

தொடர்ந்து சிக்கன், மட்டன் என கறி விருந்து நடைபெற்றது. மேலும், வடமாநில பெண்கள், ஆண்கள் நடனம் மூலம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து வடமாநிலத் தொழிலாளி பொறி கூறுகையில், “நான் தமிழ்நாடு வந்து பல வருடங்கள் ஆகிறது. இங்கேயே வேலை பார்த்து வருகிறேன். தற்போது எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியில் வேலை பார்க்கும் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் ஊரில் உள்ளது போல் இங்கு மிகவும் சந்தோஷமாக வளைகாப்பு விழா கொண்டாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். சமீபத்தில், தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என சமூக வலைதளங்களில் தவறான தகவல், சிலரால் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது கடையம் - வடக்கு மடத்தூர் கிராமத்தில் நடந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வட மாநிலத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக தெரித்துள்ளனர்.

இதையும் படிங்க: தருமபுரி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.