கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் செவ்வாய் கிழமையுடன் முடிவடைவதை அடுத்து ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்து கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
இந்நிலையில், மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ளதாலும், பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளதாலும் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காலத்தினையே மிகுந்த சிரமதத்துடன் எதிர்கொள்வதாகவும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் முழுவதும் கேள்விக்குறியாகிவிடும் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி