தென்காசி: திருநெல்வேலி சி.என். கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (38). இவர், தனது நண்பர்களுடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்காக நேற்று (டிச. 19) ஆடி காரில் சென்றார்.
அங்கு குளித்துவிட்டு காரில் புறப்பட்ட அவர், அதிவேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியது. இதில் காரின் இஞ்சின் கழண்டு விழுந்தது.
காரில் பயணித்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயத்துடன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம்!