தென்காசி: கீழப்பாவூர் குளத்தில் பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த தாத்தா உயிரிழந்த நிலையில் பேரன் உயிர்த் தப்பினார். பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கீரைதோட்ட தெருவைச் சேர்ந்த சுடைலையாண்டி(70) என்பவர் தனது பேரன் அஸ்வின்(8) என்பவருக்கு நீச்சல் கற்றுத் தர அப்பகுதியிலுள்ள குளத்திற்கு இன்று (செப்.24) அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சிறுவனை அப்பகுதியிலுள்ள பெரிய குளத்திற்கு அழைத்துச் சென்று முதுகில் காலி பிளாஸ்டிக் கேன் ஒன்றைக் கட்டி அவனுக்கு நீச்சல் கற்று தந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் முதுகில் கட்டி இருந்த காலி பிளாஸ்டிக் கேன் கழன்று விழுந்ததையடுத்து, நீரில் தந்தளித்த சிறுவன் அஸ்வினை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.
இதற்கிடையே பேரனைத் தேடி, குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற முதியவர் சுடலையாண்டி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த சுரண்டை தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் முழுகிய உயிரிழந்த முதியவர் உடலை மீட்டனர். மேலும், அவரது உடலை பாவூர்சத்திரம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாத்தா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கீழ்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நள்ளிரவில் பாஜக பிரமுகர் கார் எரிப்பு... ஈரோட்டில் பரபரப்பு...