தென்காசி: தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களுள் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் நிகழ்ச்சி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து காலை சுவாமி திருக்கோயிலில் இருந்து எழுந்தருளி கீழரதவீதியில் உள்ள மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை அம்பாள் திருக்கோயிலில் இருந்து காட்சி கொடுக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார்.பின்னர் அம்பாள் சுவாமிக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.மேலும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மருத்துவப் பணியாளர் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு!