ETV Bharat / state

தென்காசியில் இளம்பெண் கூட்டு பாலியல்.. கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

தென்காசியில் இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் செய்து கொலை செய்த குற்றவாளிகளை ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல் துறையினர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:31 PM IST

Updated : Oct 13, 2023, 9:04 PM IST

தென்காசி: கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் வலசையில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த விசாரணையில், அப்பெண்ணுடன் பழகிய ஆண் நண்பர் ஒருவர் தனியாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் செய்து கொடூரமான முறையில் அப்பெண்ணை கொலை செய்தார்.

தொடர்ந்து சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியிருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக வலசை கிராமம் வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த மனோ ரஞ்சித் (20), அதே ஊரைச் சேர்ந்த மகாபிரபு (18), வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த பரத் (19), மற்றும் கடையநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் ஆய்வாளர் ராஜா தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன்னுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், மேற்படி நான்கு நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதற்கான தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் மனோரஞ்சித், பரத், மகா பிரபு, மணிகண்டன் ஆகியோரிடம் கடையநல்லூர் ஆய்வாளர் ராஜா சமர்பித்தார்.

இதையும் படிங்க: டிஆர்பி வாரிய செயலாளர், அவரது மனைவி 354.66% சொத்து சேர்ப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு!

Last Updated : Oct 13, 2023, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.