ETV Bharat / state

கடையநல்லூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த இளம்பெண்:போலீசார் விசாரணை

கடையநல்லூர் அருகே கிணற்றில் சாக்கு மூட்டையில் நிர்வாணமாக அழுகிய நிலையில் இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி
tenkasi
author img

By

Published : Aug 10, 2023, 3:12 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து வலசை அருகே தனியாருக்கு சொந்தமான தோப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியில் கிணற்றில் சாக்கு மூட்டை ஒன்று மிதந்து காணப்பட்ட நிலையில் துர்நாற்றம் கடுமையாக வீசியுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் காலை வேலைக்கு சென்ற பெண்கள் கிணற்றில் எட்டிப் பார்த்தபோது சந்தேகப்படும்படியாக மூட்டை மிதந்து காணப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சேர்ந்தமரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து கிணற்றில் மிதந்த சாக்கு முட்டையை வெளியில் எடுத்தனர். பின்னர் சாக்கு முட்டையை பிரித்து பார்த்த போது அதில் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளம்பெண் நிர்வாணமாக இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: யூடியூப் சேனல் நடத்துவதில் போட்டி: வாலிபரை கத்தி முனையில் கடத்திய கும்பல் - தருமபுரியில் நடந்தது என்ன?

இந்த உடலானது கிணற்றில் வீசப்பட்டு 4 நாட்களாகி உடல் அழுகிய நிலையில் இருந்து உள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையிலான காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு பகுதியில் பெண் நிர்வாணமாக சாக்கு முட்டையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல் சில வாரத்திற்கு முன்னதாக செங்கோட்டை மங்களாபுரம் புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு விதமான கொலை குற்றங்களும் தற்கொலைகளும் அரங்கேறி வருகிறது. தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களும் நடைபெறுவதால் காவல்துறையினர் இரவு ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும், இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர், புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர், சேர்ந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு கால்நடை சந்தையில் வரிசை கட்டி நிற்கும் மன்னர் கால குதிரைகள் மற்றும் ஓங்கோல் இன மாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.