ETV Bharat / state

Fact check : மனிதர்களை தாக்கிய கரடி - தவறாக பரவும் வீடியோ

தென்காசி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். ஆனால் கரடி தாக்குவதை நேரடியாக படம் எடுத்தது போன்று பிரபல ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பரப்பப்படும் வீடியோ தவறானது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Fact check
Fact check
author img

By

Published : Nov 8, 2022, 8:10 PM IST

Updated : Nov 9, 2022, 4:23 PM IST

தென்காசி: கடையம் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் காய்கறி வியாபாரி வைகுண்ட மணி என்பவர் கடந்த நவம்பர் 6ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெத்தான்பிள்ளை அருகே சென்ற போது வனப்பகுதியிலிருந்து குறுக்கிட்ட கரடி ஒன்று வைகுண்டமணியை கடித்தது. இதனைப் பார்த்த அண்ணன் தம்பிகளான சைலப்பன், நாகேந்திரன் ஆகியோர் அவரை மீட்க முயற்சித்தனர்.

அவர்களையும் கடித்துக்குதறிய கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றது. இதில் காயமடைந்த மூவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கரடி தாக்கும் போது நேரடியாக எடுக்கப்பட்ட வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாகவும் வெளியிடப்பட்டது.

மனிதர்களை தாக்கிய கரடி - தவறாக பரவும் வீடியோ

ஆனால் இந்த வீடியோ தவறானது இதனை பகிர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரடி தாக்கியதும், அதனால் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதும் உண்மைதான் என்றாலும், அச்சமூட்டக்கூடிய 8 வருடங்கள் பழைய வீடியோவை பகிர்வதால் மக்களிடம் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ள அந்த வீடியோவை ஈடிவி பாரத்தின் உண்மை கண்டறியும் குழு (Fact Checking Team) ஆய்வுக்குட்படுத்தியது. இதில் குறிப்பிட்ட அந்த வீடியோ 2015ம் ஆண்டே ஐபிசி தமிழ் இணையதளத்தால் அதன் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சத்தீஷ்கரின் சூரஜ்பூரில் 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரி கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2015ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோவை தற்போது பகிர்ந்து குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

காயமடைந்த மூன்று பேரில் இருவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதலில் தாக்கப்பட்ட வியாபாரி வைகுண்டமணியைக் காட்டிலும், அவரை காப்பாற்றச் சென்ற சைலப்பன் மற்றும் நாகேந்திரனுக்குத் தான் அதிக காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். எனினும் இவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே ஆவேசமாக சுற்றித்திரிந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் நவம்பர் 6ம் தேதி மாலையில் பிடித்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு தங்கள் கண்முன்னே கரடியை கொல்ல வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். களக்காடு அருகே செங்கல் தேரி என்ற ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கரடியை விட்டதாக வனத்துறையினர் கூறினர்.

இந்நிலையில் அடர்ந்த வனத்திற்குள் விடப்பட்டதாக கூறிய கரடி இன்று (நவம்பர் 8) திடீரென உயிரிழந்ததாக கூறிய வனத்துறையினர், கரடியின் உடலை எரித்தனர். வழக்கமாக வன விலங்குகள் இறந்து விட்டால் குழிதோண்டி புதைப்பதுதான் வழக்கம். ஆனால் கரடியின் உடல் எரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான மயக்க மருந்து டோசால் கரடி உயிரிழந்ததா என்றும் வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க:'காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்' - தமிழ்நாட்டின் புதிய சரணாலயம் அறிவிப்பு

Last Updated : Nov 9, 2022, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.