தென்காசி: டெல்லியைச் சேர்ந்த செவிலியர் ரூபி என்பவர் திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்த நிலையில், அவரின் சான்றிதழ், உடைமைகள் தொலைந்து போக, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தென்காசி பேருந்து நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் காணப்பட்டார்.
பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து மாவட்ட காவல்துறையினர் உதவியுடன் வடகரையில் உள்ள அன்பு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நோயின் தாக்கம் முழுமையாக குணமடைந்த நிலையில் விலாசம், தொலைபேசி எண் கூறியதை தொடர்ந்து டெல்லியில் இருந்து உறவினர்களை தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேச வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். உறவினர்களை கண்ட ஆனந்தத்தில் ரூபி கண்ணீர் மல்க அவரது குடும்பத்தினர் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெல்லை பாஜக தலைவர் கைது - அதிரடி காட்டிய மாநகராட்சி ஆணையர்