ETV Bharat / state

நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தென்காசி: செங்கோட்டை அருகேவுள்ள குண்டாறு நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் 20 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவனின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்
நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்
author img

By

Published : Nov 2, 2020, 8:35 PM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியையொட்டி 36 அடி கொள்ளளவை கொண்ட குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக குண்டாறு நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்துவருகிறது. இந்நிலையில், அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் விடுமுறை நாள்களில் கரோனா தடை உத்தரவை மீறி குண்டாறு நீர் வழித்தடங்களில் சென்று குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (நவ.01) மாலை செங்கோட்டை கீழபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த நாவஸ் என்பவரின் மகன் ஜிப்ரின் (15). தனது நண்பர்களுடன் குண்டாறு நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.

நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் குளித்தபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் ஜிப்ரின் நீரில் மூழ்கி மாயமானார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த 35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீர்மூழ்கி கேமராவை பயன்படுத்தி உடலை தேடிய நிலையில் அணையின் மதகு அருகில் உடல் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் உடலை மீட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.