ETV Bharat / state

கடையம் அருகே கூண்டில் சிக்கிய கரடி! - Tenkasi District News

தென்காசி: கடையம் அருகே உள்ள பங்களா குடியிருப்பு பகுதியில் தனியார் தோட்ட வளாகத்தில் வைக்கப்பட்ட கூண்டில் கரடி பிடிபட்டது.

கூண்டில் சிக்கிய கரடி
கூண்டில் சிக்கிய கரடி
author img

By

Published : Jun 18, 2020, 7:17 AM IST

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரக பகுதியில் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி விளைநிலங்களையும், வீட்டு விலங்குகளையும் தாக்கி வந்தன. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் உள்ள மா, பலா, தென்னை, உள்ளிட்ட பயிர்களை மிகவும் சேதப்படுத்தி வந்தன.

இது குறித்து வனத்துறைக்கு புகார் வந்ததையடுத்து துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் கண்காணித்து கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். இந்நிலையில், ஏப்ரல் 29 முதல் ஜூன் 16 வரை நான்கு கரடிகள் சிக்கின.

இந்நிலையில் மீண்டும் பங்களா குடியிருப்பு தனியார் தோட்டத்தில் நேற்று நள்ளிரவு ஐந்து வயது மதிக்கத்தக்க கரடி ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

இதையடுத்து துணை இயக்குனர் கொங்கு ஓங்காரம் தலைமையில் வனசரகர் நெல்லை நாயகம், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கூண்டில் சிக்கிய கரண்டியை முண்டந்துறை வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் அடுத்தடுத்து கடையம் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. அதுபோல 48 நாட்களில் ஐந்து கரடி பிடிபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெல்லையில் பிரபல கடைகள் மூடல் - மாநகராட்சி அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.