மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக தகுந்த இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னேற்பாடுகள், தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நான்காவது ஆண்டாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இரண்டு தேர்வு மையங்களிலும், செங்கோட்டையில் ஒரு தேர்வு மையம் என மூன்று தேர்வு மையங்களில் 668 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதுவதற்காக காலை முதலே மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வரத்தொடங்கினர். தேர்வு நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வந்தனர். மேலும், கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம், கை சுத்திகரிப்பான வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் காலை முதலே தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்கள் நனைந்தபடியே தேர்வு மையத்திற்குச் சென்றனர்.