தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சில நாள்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அது தொடர்பாக கடையநல்லூர் வனத் துறையினர் சொக்கம்பட்டி, புளியங்குடி பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேரை பிடித்து விசாரணை நடத்தி அவர்களில் ஒருவர் விடுவிக்கப்படு ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக் கூறப்படுகிறது.
மீதமுள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் (52), மாரி (51), ராமையா (53), முருகன் (58) ஆகியோருக்கு தலா ரூ.2000 வீதம் அபராதம் விதித்ததுடன் அவர்களைச் சரமாரியாகத் தாக்கி விடுவித்ததாகக் கூறப்படுகிறது.
அதனால் பலத்த காயங்களுடன் நான்கு பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவர்களின் உறவினர் வனத் துறையினர் அடித்து துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் இது தொடர்பாக புளியங்குடி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பலாப்பழங்களுக்காக முகாமிடும் யானைகள் - விரட்டும் பணியில் வனத்துறையினர்