ETV Bharat / state

அஞ்சலக சேமிப்பு வங்கி மூலம் பயனடைந்த  30,000 தென்காசி மக்கள்! - அஞ்சல் துறை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் (இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி) திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

30,000 people have benefited from India Post Payment Bank account in Tenkasi

author img

By

Published : Aug 19, 2020, 10:26 AM IST

தென்காசி மாவட்டம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அஞ்சலக சேமிப்பு வங்கி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், ''அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி தனது இரண்டு ஆண்டு சேவையை நிறைவுசெய்துள்ளது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த மாதத்திலிருந்து புதன்கிழமைதோறும் இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி மெகா மேளா நடத்தப்பட்டுவருகிறது.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான கணக்கைத் தொடங்குவதற்கு இந்த மெகா மேளா நடத்தப்படுகிறது. இந்தக் கணக்குகளை தொடங்குவதற்குப் பொதுமக்கள் எந்த ஆவணங்களும் வழங்கத் தேவையில்லை. கைரேகைப் பதிவு, செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும். சில விநாடிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

இந்தக் கணக்கு மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து மானியங்களையும் அஞ்சல் அலுவலகம் வந்தும், வீட்டில் இருந்தபடியே அஞ்சல்காரர் வாயிலாகவும் எளிதாக 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம்.

முதுநிலை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

கோவில்பட்டி கூட்டத்தில் இதுவரை 13 ஆயிரம் பேர் இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி தொடங்கியுள்ளனர். இதன்மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. எனவே இந்த வசதிகளை மக்களிடம் கொண்டுசெல்ல சிறப்பு மேளாக்கள் நடத்தப்பட்டுவருகின்றன'' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.