தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்போது, பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் ஆலங்குளம் தொகுதி வேட்பாளருமான ஹரி நாடார், கடங்கநேரி பகுதியில் காமராஜர் சிலை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை. அவர்களை தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் அலைக்கழித்து வருகின்றனர். எனவே அங்கு முறையான மருத்துவ வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என மனு அளித்தேன்.
மேலும், வரும் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் 5 வேட்பாளர்கள் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க உள்ளேன். விருப்பத்தின் காரணமாகவே அதிகமாக நகை அணிந்திருக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தனியார் வங்கியில் பணம் செலுத்த வந்த இளைஞர் கைது - கள்ளநோட்டுகள் பறிமுதல்!