தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள சிலர், வெளி மாநிலங்களிலிருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசியை அடுத்த புளியங்குடி பகுதிக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாகவாக புளியங்குடி காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்று (ஜூன்.13) அதிகாலை காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் பாபு தலைமையிலான காவல் துறையினர் புளியங்குடி எல்லைப்பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பெங்களுரிலிருந்து காய்கறிகளை ஏற்றி வந்த லாரியை அவர்கள் சோதனையிட்டனர். அந்த சோதனையில் காய்கறி பெட்டிகளுக்கு இடையில் சுமார் 20 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்த காவல் துறையினர், அவற்றை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர் சிவா, சையதுஅலி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கடையின் பூட்டை உடைத்து 6.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை!