ETV Bharat / state

லித்தியம் பேட்டரியில் இயங்கும் ஜீப்: இளைஞரின் புதிய முயற்சி - மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர் கௌதம்

கீழடியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க லித்தியம் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை பொறியியல் படித்த இளைஞர் உருவாக்கியுள்ளார்.

லித்தியம் பேட்டரியில் இயங்கும் ஜீப்  40 ரூபாய் செலவில் 280 கிலோ மீட்டர் பயணிக்கலாம் !

author img

By

Published : May 22, 2022, 7:01 AM IST

சிவகங்கை: இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் தற்போது இருக்கின்ற பெட்ரோல் டீசல் விலை காரணங்களால் கார் என்பது கனவாகவே போய்விடும். ஒரு பக்கம் எலக்ட்ரிக்கல் கார்கள் விலை அதிகம். அதற்கு எல்லாம் மாற்றாக கிராமத்து இளைஞர் உருவாக்கிய ஜீப்பிற்கு தேவையான உதிரிப் பாகங்களை கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக குறிப்பாக விவசாயத் தேவைக்கு பயன்படுத்துகின்ற மாதிரி ஒரு ஜீப்பை வடிவமைத்து அசத்தி வருகிறார் ஒரு இளைஞர்.

கீழடி என்றாலே நகர நாகரீக எடுத்துக்காட்டாக விளங்கும் உலகின் தொன்மையான பொருட்கள் தமிழனின் வாழ்விடம் முறைகள் மட்டுமே. நம் நினைவிற்கு வரும் அப்படிப்பட்ட கிராமத்தில் விவசாயிகளான அருணகிரி - கவிதா தம்பதியரின் ஒரே மகன் கெளதம். ஏழ்மை நிலையிலும் தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பயின்று முடித்துள்ளார்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவருடைய கனவு. படித்து முடித்துவிட்டு சில நாட்கள் வேலையில்லாமல் இருந்ததால் கம்பி கட்டுகின்ற வேலைக்கும் சென்று உள்ளார். படித்து முடித்துவிட்டு கம்பி கட்டுற வேலைக்கு எல்லாம் போய் கொண்டிருகின்றாய் என வீட்டில் வேதனைப்பட்டு உள்ளனர்.

லித்தியம் பேட்டரியில் இயங்கும் ஜீப்

தொடர்ந்து வீட்டிலிருந்த கௌதமிற்கு மாசு ஏற்படாத வகையில் கார் ஒன்றையும், விவசாயத் தேவைக்கு பயன்படுத்துவதற்கு ஜீப் ஒன்றையும் தயார் செய்து பார்ப்போம் என தோன்றியது. குறிப்பாக தற்போது விற்கும் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் ஜீப் ஒன்றை பழைய பொருட்களை கொண்டு உருவாகியுள்ளார்.

நான்கு சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் திறனுடன் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை வடிவமைத்து அசத்தி இருக்கிறார் இந்த இளைஞர். கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தையும் பெற்றோர் கடனாக பெற்று தந்த பணத்தையும் கொண்டு சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயில் இந்த காரை உருவாக்கியுள்ளதாக கூறும் கெளதம் .பேட்டரி வாங்க வசதியில்லாத நிலையில் வாடகைக்கு பேட்டரி வாங்கி இந்த ஜீப்பை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஜீப்பில் லித்தியம் பேட்டரி வாங்கி பயன்படுத்தினால் சுமார் நாற்பது ரூபாய் செலவில் இருநூற்று என்பது கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். குறிப்பாக எந்த ஒரு இரைச்சலும் இல்லாமல் ஜீப்பை தயாரித்து உள்ளார்.

மேலும் விவசாய தேவைக்கு உரமூட்டைகள் கொண்டு செல்வதற்கும் இந்த வாகனம் எளிமையாக பயன்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக விவசாய பொருட்களை டிராக்டரில் கொண்டு செல்லும்போது அதற்கான டீசல் விலையை விட குறைந்த அளவே பேட்டரியில் இயங்கக்கூடிய இந்த ஜீப் பயன்படுகிறது. இதனால் மிகப்பெரிய செலவு மிச்சம் அடைவதாகவும் கூறப்படுகிறது.

ஜீப்பிற்கான உதிரிபாகங்கள் பல இடங்களில் பழைய பொருட்களை வாங்கி வந்து வீட்டிலேயே ஜீப்பை உருவாக்கியதாக கூறுகிறார். இதில் ஜீப்பிற்கு பயன்படுத்தும் டயர்கள் மட்டும் அதிக செலவானதாகவும் கூறுகிறார்.

தற்போது வாடகைக்கு வாங்கிய பேட்டரிகளை கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு அரசு தனக்கு உதவினால் இதேபோன்று மோட்டார் சைக்கிளில் பேட்டரி கொண்டு பல கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய பைக்குகளை உருவாக்க முடியும் என்கிறார் மெக்கானிக்கல் பொறியியல் மாணவர் கௌதம்.

இதையும் படிங்க : நாட்டின் முதல் தானியங்கி காரை வடிவமைத்த எம்.ஐ.டி மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.