ETV Bharat / state

அரசியலை விட சினிமாவில் தான் மிகச் சிறந்த அறிவாளிகள் உள்ளனர்  - கவிஞர் சிநேகன் - கவிஞர் சிநேகன்

சிவகங்கை: அரசியலை விட சினிமாவில்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று கவிஞர் சிநேகன் தெரிவித்துள்ளார்.

கவிஞர் சிநேகன்
author img

By

Published : Mar 26, 2019, 8:27 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கவிஞர் சிநேகன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயகாந்தனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிநேகன், அடுத்த உலகப்போர் என்பது தண்ணீருக்காகத் தான் வர உள்ளது. அது தமிழகத்தில் வரக்கூடாது என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் நோக்கமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இத்தேர்தலை மாற்றத்திற்கான தேர்தலாக மக்கள் நீதி மையம் பார்க்கிறது என்று தெரிவித்த சிநேகன் கமலின் பேச்சை கேட்டுத்தான் இந்த ஒரு வருட காலத்தில் மக்கள் எழுச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், நாங்கள் திராவிடர்களுக்கு எதிரானவர்கள் அல்ல தேசியத்திற்குள்தான் திராவிடம் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் நம்புகிறது.

சினிமாக்கார்கள்தான் மக்களின் வலியை தெரிந்து வைத்துள்ளனர் அரசியலை விட சினிமாவில்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சூளுரைத்தார்.

சிவகங்கை    ஆனந்த்
மார்ச் 26

அரசியலை விட சினிமாத்துறையில் தான் மிகச் சிறந்த அறிவாளிகள் உள்ளனர் - கவிஞர் சிநேகன்

சிவகங்கை: அரசியலை விட சினிமாவில்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த பின் கவிஞர் சிநேகன் பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கவிஞர் சிநேகன் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயகாந்தனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர் கூறியதாவது

அடுத்த உலகப்போர் என்பது தண்ணீருக்காகத்தான் வர உள்ளது. அது தமிழகத்தில் வரக்கூடாது என்பது தான் மக்கள் நீதி மையத்தின் நோக்கம் என்றவர் இத்தேர்தலை மாற்றத்திற்கான தேர்தலாக மக்கள் நீதி மையம் பார்க்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் கமலின் பேச்சை கேட்டுத்தான் இந்த ஒரு வருட காலத்தில் மக்கள் எழுச்சியடைந்துள்ளனர். நாங்கள் கூட்டணி கேட்டு எந்த கட்சி அலுவலகத்திற்கும் செல்லவில்லை. வந்தவர்களில் கூட பல பேரை நாங்கள் நிராகரித்துள்ளோம் என்றார்.

நாங்கள் திராவிடர்களுக்கு எதிரானவர்கள் அல்ல
தேசியத்திற்குள் தான் திராவிடம் உள்ளதாக மக்கள் நீதி மையம் நம்புகிறது.

சினிமாக்கார்கள் தான் மக்களின் வலியை தெரிந்தவர்கள். அரசியலை விட சினிமாவில்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று கூறினார்.

மக்கள் நீதி மையம் சட்டத்தை நம்புகிறது. தேர்தல் ஆணையம் சரியாக நடக்கும் என்பதையும் நம்புகிறது. பயப்படுபவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை குறை சொல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.