சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைந்ததுள்ள நீச்சல் பயிற்சி மையத்திற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பூட்டு போட்டுள்ளார். இதனால் பயிற்சிக்கு வந்த வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து வீரர்களிடம் கேட்டபோது சமீபத்தில் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மாவட்ட விளையாட்டு அலுவலர் கீதா குறித்து புகார் அளித்தோம், எனவே அதற்குப் பழிவாங்கும் விதமாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்கள். இதுபற்றி கீதா கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில், வீரர்களின் பயிற்சியினை முடக்க நினைக்கும் அவரின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.