சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பெருமாள். அதே பகுதியில் வசித்துவரும் இவரது நண்பர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளியான மலைச்சாமியும் தினசரி காமராஜர் காலனி பகுதியில் உள்ள ரிங் ரோட்டில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் இன்று வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மேலூர் சாலையில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீதும் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.