சிவகங்கை மாவட்டம் நாமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து தற்சமயம் விடுப்பிற்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
இந்நிலையில், வாஞ்சிநாதன் தனது வீட்டு செலவிற்காக சிவகங்கையில் உள்ள ஒரு வங்கியில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் இலந்தங்குடிபட்டி அருகே வட்டாட்சியர் சேகர் தலைமையிலான பறக்கும் படையினர் வாஞ்சிநாதனை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்த இரண்டு லட்ச ரூபாயை உரிய ஆவணமில்லை எனக்கூறி பறிமுதல் செய்ததுடன் பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.