சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நேற்று(ஜன.17) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தொடங்கிவைத்தார். கரோனா கட்டுப்பாடுகளின்படி போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 300க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன.
இதற்காக 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களமிறங்கினர். இதனிடையே 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதிக காளைகளை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் சேலம் கூலமேடு ஆகிய பகுதிகளில் கரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படத் தொகுப்பு