ETV Bharat / state

"மூன்றாவது அலை வந்தாலும் அதனை தடுக்கத் தயாராக உள்ளோம்" - sivagangai latest news

தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"மூன்றாவது அலை வந்தாலும் அதனை தடுக்க தயாராக உள்ளோம்

author img

By

Published : Oct 3, 2021, 11:08 PM IST

சிவகங்கை: திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார், அமைச்சர் மா.சுப்பிரமணியன். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

”செப்டம்பர் மாதம் மட்டும் ஒரு கோடியே 42 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயித்த ஒரு கோடியே 4 லட்சத்தை விட 30 லட்சம் தடுப்பூசி அதிகமாக போடப்பட்டுள்ளது. இந்த மாதம் ஒரு கோடியே 23 லட்சம் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையும் சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

"மூன்றாவது அலை வந்தாலும் அதனைத் தடுக்கத் தயாராக உள்ளோம்"

மீண்டும் கடந்த மாதத்தைப்போல ஒன்றிய அரசு தடுப்பூசிகள் அதிகமாக தரும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம். மூன்றாவது அலை வரக் கூடாது, அது வந்தாலும் அதை எதிர்கொள்ளத்தயாராகும் வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 62% முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய பாதுகாப்பான சூழல் W.H.O மற்றும் I.C.M.R சொல்வதுபோல 70% மேல் தடுப்பூசி போட்டு விட்டால், எந்த அலை வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காத்து விடலாம். பெரிய ஒரு உயிர்ச்சேதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த 70% தடுப்பூசியை அக்டோபர் இறுதிக்குள் எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது‌. நேற்று(அக்.2) வரை 62 % வரை முதல் தடுப்பூசி 20% வரை இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் உறுதியாக 70% இலக்கை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:இருளர் இன மக்களுக்கு ’பழங்குடியினர் சான்று’ வழங்கிய அமைச்சர் சா.மு.நாசர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.