சிவகங்கை அருகே பையூரில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் வீராங்கனை இராணி வேலு நாச்சியாரின் 292ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து நேற்று (ஜன.3) மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், "சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்து அதில் வெற்றியும் கண்டு, பெண் இனத்திற்குப் பெருமை சேர்த்த ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாடவும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ராணி வேலுநாச்சியாரின் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும்.
மேலும், நாடாளுமன்றத்தில் வேலுநாச்சியாரின் திருவுருவப் படம் மற்றும் சிலை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த தலைவர்.. தளபதிக்கு பிறகு உதயநிதி.. ஐ.பெரியசாமி மகன் கருத்து!