சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்துள்ள ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பாலமுருகன்.
இந்நிலையில், பாலமுருகன் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும், மரம் வளர்ப்பை வலியுறுத்தியும் உலக சாதனைக்காக 24 மணிநேரம் பின்னோக்கி 165 கிலோ மீட்டர் இலக்கு நிர்ணயித்து நடந்து செல்லும் சாதனை பயணத்தை தொடங்கினார்.
இந்த சாதனை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ரோஹித் நாதன், ராஜகோபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
நாளை காலை வரை பின்னோக்கி நடந்து 165 கிலோ மீட்டர் தூர இலக்கை அடைந்தால் உலக சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.