சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்லியல் துறையும், அடுத்த மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டன.
ஆறாம் கட்ட அகழாய்வின்போது, கீழடி மட்டுமன்றி அதன் அருகேயுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகையிலும் கூடுதலாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் கீழடி அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை ஏழாம் கட்ட அகழாய்வைத் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.
மத்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வுக்கு அனுமதியளித்துள்ள நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம், தற்போது ஏழாம் கட்ட அகழாய்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் தமிழ்நாடு அரசு, முறைப்படி அதனை அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்!