தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, சிவகங்கை மக்களவைத் தொகுதியில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் மகனும் சிவகங்கைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவரது தாயார் நளினி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ரங்கராஜன் ஆகியோரும் அவருடன் வாக்களித்தனர்.
முன்னதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் காலை 7 மணியளவில் சிவகங்கை தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.