ETV Bharat / state

சர்வதேச முதியோர் தினம்: மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

சிவகங்கையில் சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி, மூத்த வாக்காளர்களின் தொடர் பங்களிப்பை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

சர்வதேச முதியோர் தினம்: மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
சர்வதேச முதியோர் தினம்: மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
author img

By

Published : Oct 3, 2022, 7:51 AM IST

சிவகங்கை: ஆண்டுதோறும் அக்டோபர் 1ஆம் தேதி சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழ்நாடு அரசு முதியோர்களை பாதுகாத்திடும் வண்ணம், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முதியோர் தின விழா, காப்பகங்களில் உள்ள வயதானவர்களுக்கு மனச்சோர்வின்றி புத்துயிர்படுத்தும் விழாவாக அமைகிறது. இதற்காக சமூகநலத்துறையின் மூலம் பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கப்பட்டு, முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மேலமங்களம், காமராஜர் காலனி, சிவகங்கை, காரைக்குடி, மதகுபட்டி மற்றும் கண்டவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் முதியோர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன.

சர்வதேச முதியோர் தினம்: மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

இவைத் தவிர பதிவு செய்யப்பட்ட தனியார் விடுதிகள் மானாமதுரை, கல்லல், பூவந்தி, சிவகங்கை போஸ் ரோடு, கீழசெவல்பட்டி ஆகிய பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூத்த வாக்காளர்களின் தொடர் பங்களிப்புக்கிற்காக 21 முதியோர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளவரவப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள முதியோர்களுக்கு மதிய உணவினை மாவட்ட ஆட்சியர் பரிமாறினார். இந்நிகழ்வில் சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் அன்புகுளோரியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 100 வயதை கடந்த 14 ஆயிரம் வாக்காளர்களுக்கு முதியோர் தினத்தில் கவுரவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.