ETV Bharat / state

Erode East By poll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இந்திய தேசிய லீக் கட்சி யாருக்கு ஆதரவு? - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலவரம்

Erode East By-Election 2023: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்கள் இந்திய தேசிய லீக் கட்சியின் ஆதரவு திமுகவிற்கே என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 700 பேரை ஆதிநாராயனன் குழு பரிந்துரையின்படி, விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 22, 2023, 2:15 PM IST

Erode East By-Election 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; திமுகவிற்கே இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு

சிவகங்கை: சிவகங்கையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர், 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் (Erode East By-Election 2023) திமுக கூட்டணிக்கே எங்களது ஆதரவு' எனத் தெரிவித்தார். சிவகங்கையில் தனியார் மண்டபத்தில் இன்று நடந்த (ஜன.22) இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் பசீர் அகமது பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின், மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒன்றிய அரசு சேது சமுத்திர திட்டத்தை (Sethusamudram Shipping Canal Project) நிறைவேற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முன் வரவேண்டும் என்றும், நதிநீர் திட்டங்களை உருவாக்கி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் என மொத்தமாக 700 பேர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதாகவும், ஆதிநாராயணன் குழுவின் பரிந்துரையின் படி, அவர்களை விடுதலை செய்ய அரசு முன் வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே எங்கள் ஆதரவு என்றும், அவர்கள் வெற்றி பெறவே தங்கள் கட்சியினர் வேலை செய்ய உள்ளதாகவும்' தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேருந்து படிக்கட்டு வழியே கீழே விழுந்த குழந்தை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.