சிவகங்கை: பாகனேரியில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. வரும் 27ஆம் தேதி முறையாக அறிவிப்பு வெளியாகும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யாரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஜெயலலிதா, கலைஞருக்கு பிறகு பல முனை போட்டியுள்ளது. தலைவர்களை காலம் உருவாக்கிய பிறகு இரு முனை போட்டி ஏற்படும்.
திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்தால், மக்களை சந்திக்க அஞ்சி ஓடி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக திருந்த வேண்டும் என்பதற்காக, மக்கள் அவர்களை தேர்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்" என்றார். பின்னர் அதிமுக ஒபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த “அத்தைக்கு மீசை முளைக்கடும் பிறகு பார்க்கலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும்: கே.ஏ.செங்கோட்டையன்