ETV Bharat / state

கோயில்கள், அறக்கட்டளைகளில் ஒன்றிய அரசு தலையிடும் - எச்சரித்த ஹெச். ராஜா - ஸ்டாலின்

மானாமதுரையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட ஹெச். ராஜா, பாஜகவைச் சீண்டினால் கோயில்கள், அறக்கட்டளைகளில் ஒன்றிய அரசு தலையிடும் என எச்சரித்துள்ளார்.

tamil nadu government  h raja  h raja warns tamil nadu government  sivagangai news  sivagangai latest news  சிவகங்கை செய்திகள்  ஹெச் ராஜா  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின்  தமிழ்நாடு முதலமைச்சரை எச்சரித்த ஹெச் ராஜா
ஹெச் ராஜா
author img

By

Published : Oct 11, 2021, 1:34 PM IST

சிவகங்கை: மானாமதுரையில் பாஜக சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா பரிசுகளை வழங்கினார். இதில் பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உடனிருந்தார்.

இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய ஹெச். ராஜா, “ஒன்றிய அரசு அனுமதித்தால் இந்து வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதாகத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. மற்ற மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க ஒன்றிய அரசிடம் அனுமதியா வாங்கினார்கள்.

மகாளய அமாவாசைக்குத் தர்ப்பணம் செய்ய வந்தவர்களை காவல் துறையினர் அடித்து விரட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு, இந்து விரோத அரசாக உள்ளது. தமிழ்நாடு பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லாத முதலமைச்சர் இந்து விரோதியாக உள்ளார்.

ஹெச். ராஜா எச்சரிக்கை

இந்து விரோத செயல்களை வேரோடு வெட்ட பாஜக முயற்சித்துவருகிறது. இது ஆன்மிகத்திற்கும், இந்து விரோதத்திற்கும் இடையேயான யுத்தம். அறங்காவலர் குழு இல்லாத கோயில்களில் காவலாளிகூட நியமிக்க முதலமைச்சருக்கோ, அறநிலையத் துறை அமைச்சருக்கோ அதிகாரம் இல்லை.

ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிந்த நிலையில் உள்ளன. அவற்றை அறநிலையத் துறை எடுத்துச் சீரமைக்கவில்லை. ஆனால் அறநிலையத் துறை நல்ல நிலையில் உள்ள கோயில்களை எடுத்து அழிக்க நினைக்கிறது.

குயின்ஸ் லேண்ட் மீட்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி. கோயில்கள், அறக்கட்டளைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. பாஜகவைச் சீண்டினால் அவற்றில் ஒன்றிய அரசு தலையிடும்” என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க: விஜயதசமி நாளன்று கோயில்கள் திறப்பு? - உயர் நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.