ETV Bharat / state

கீழே கிடந்த நகை, பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான தந்தை - மகன்! - தந்தை மகன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இரண்டு சவரன் தங்க நகை மற்றும் 6,500 ரூபாய் பணத்தை உள்ளடக்கிய கீழே கிடந்த பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான தந்தை-மகனுக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

கீழே கிடந்த தங்க நகை மற்றும் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தந்தை -மகன்

author img

By

Published : Jun 2, 2022, 3:22 PM IST

சிவகங்கை: திருப்புவனத்தைச் சேர்ந்தவர், பிரபுசுப்பிரமணி. இவரும் இவருடைய மகன் உலகேஸ்வரனும் மதுரையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திருப்புவனம் நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது, மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு உள்ளே நுழையும் பாலத்தின் அருகே சாலை ஓரமாக பர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது.

இருவரும் அதை எடுத்துப் பார்த்துள்ளனர். அதன் உள்ளே 2 சவரன் மதிப்புள்ள தங்க செயின் மோதிரம், தாயத்து மற்றும் 6,500 ரூபாய் பணமும் இருந்துள்ளது. இதை எடுத்துக்கொண்டு தந்தை மகன் இருவரும் சென்று, திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பர்ஸ் உள்ளே இருந்த அடையாள அட்டையைப் பார்த்து காவல்துறையினர் விசாரித்தபோது, விருதுநகர் மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கடம்பவனம் என்பவர் தவறவிட்டது தெரியவந்தது.

கீழே கிடந்த தங்க நகை மற்றும் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தந்தை -மகன்
கீழே கிடந்த தங்க நகை மற்றும் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தந்தை -மகன்

உடனே அவரை வரவழைத்த காவல் துறையினர் பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் கீழே கிடந்த பர்ஸை ஒப்படைத்த பிரபு சுப்பிரமணி மற்றும் அவரது மகன் உலகேஸ்வரன் இருவரையும் காவல் துறையினர் வெகுவாகப் பாராட்டினர். தொடர்ந்து பொதுமக்களிடம் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: குட்கா பரிசோதனை செய்த போலி போலீஸார்; ரூ.75,000 பணம் நகை அபேஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.