சிவகங்கை: திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் இத்திருக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு வருகை தந்து கோயிலில் லட்சுமி நரசிம்மன் பிம்பத்திற்கு செப்பு தகட்டில் தங்க ரேக் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதையும் படிங்க: இனி பஸ்ல ஒரசுனா அவ்ளோதான்... தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்...!