சிவகங்கை: தேவகோட்டை அருகே நூறு குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு பரிந்துரையின் பேரில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் வசித்து வந்த சிலருக்குப் பட்டா வழங்காமல், தற்போது வந்தவர்களுக்கு அந்த இடத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நரிக்குறவர் மக்கள் சென்றனர்.
அப்போது இருக்கை இருந்தும் அவர்களை அதிகாரிகள் தரையில் அமர வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பலர் கைக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தலை முடியில் வைத்து தங்கம் கடத்தல் - சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்