ETV Bharat / state

பெட்ரோலுக்குப் பதிலாக டீசல்: பெட்ரோல் பங்கில் தீப்பற்றி எரிந்த கார்! - பெட்ரோல் காருக்கு டீசல் தீப்பற்றி எரிந்த கார்

சிவகங்கை அருகே ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் காருக்கு ஊழியர் ஒருவர் தவறுதலாக டீசல் நிரப்பியுள்ளார். டீசலை வெளியேற்றும்போது ஏற்பட்ட விபத்தில் கார் தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக நாசமானது.

பெட்ரோலுக்கு பதிலாக டீசல் - பெட்ரோல் பங்கில் தீப்பற்றி எரிந்த கார்

author img

By

Published : Nov 15, 2021, 1:45 PM IST

சிவகங்கை: தேவகோட்டை அருகே ஊஞ்சனை புதுவயலைச் சேர்ந்தவர் பாண்டியன் (62). இவர் தனது பேரனுடன் ஹோண்டா அமேஸ் காரில் (Honda amaze car) திருப்பத்தூர் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளார்.

அப்போது ஊழியர் தவறுதலாக பெட்ரோல் (Petrol) போடுவதற்குப் பதிலாக டீசலை (Diesel) 1,500 ரூபாய்க்கு நிரப்பியுள்ளார். பெட்ரோல் கார் என்பதால் நிரப்பிய டீசலை எடுப்பதற்காக காரின் உரிமையாளர் மெக்கானிக்கை அழைத்துள்ளார்.

மெக்கானிக் உதவியுடன் டீசலை எடுத்துக் கொண்டிருக்கும்போது பேட்டரியிலிருந்து தீப்பொறி பறந்துள்ளது. கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பெட்ரோலுக்குப் பதிலாக டீசல் - பெட்ரோல் பங்கில் தீப்பற்றி எரிந்த கார்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தசென்ற தேவகோட்டை தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. பெட்ரோல் பங்கில் விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பளபளக்கும் சர்மம் வேண்டுமா - அப்போ கடிங்க கேரட்... குடிங்க கேரட் ஜூஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.