சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மாணவிகள் கலந்துகொண்டனர். 20 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் புதுக்கோட்டை - தருமபுரி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 24-16 என்ற புள்ளிகள் கணக்கில் தருமபுரி அணி சாம்பியன் பட்டத்தை வென்று பரிசுத் தொகையாக ரூ.10 ஆயிரத்தை கைப்பற்றியது.