சிவகங்கை: திருப்பத்தூரில் நடைபெற்று வரும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 220ஆவது நினைவு தினத்தை, முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "வாரிசு அரசியலுக்கு எதிராக குரல்கொடுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, வாரிசுகள் அரசியலுக்கு வருவது பாவமல்ல என்றும், ஜனநாயக நாட்டில் இது இயல்பு என்றும் தெரிவித்ததுடன், அது அவரது உரிமை என்றும் கூறினார்.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, மக்களின் பணத்தை வழிப்பறி செய்வதை போல, ஒன்றிய அரசிற்கு பணம் தேவைப்படும்போது பெட்ரோல், டீசல் மீதனை வரியை உயர்த்தி விலையை ஏற்றுவதாக கூறினார்.
ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக சு நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.
ஒரே நிதிநிலை அறிக்கையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அமைந்த கூட்டனி போல, நகர்புற தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டனி தொடரும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த வைகோ நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? துரை வைகோவுடன் நேர்காணல்