ETV Bharat / state

'ஜி 20 இந்தியா தலைமை: பாஜகவின் திறமையால் கிடைத்தது என்பது பொய்' - ஜி 20

ஜி 20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பது பாஜகவின் திறமையால் கிடைத்தது என்பது பொய் பிரசாரம் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார்.

ஜி 20 மாநாடு இந்தியா தலைமை: பாஜக பொய் பிரச்சாரம்

author img

By

Published : Dec 7, 2022, 3:43 PM IST

சிவகங்கை: சிவகங்கை - மேலூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பங்கேற்று அங்கிருந்த மாணவிகளிடம் கலந்துரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், 'ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்பது என்பது சுழற்சி முறையிலேயே கிடைத்துள்ளது. இது ஏதோ பா.ஜ.கவின் திறமைக்காக கிடைத்தது என்பது பொய் பிரசாரம்' என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு பா.ஜ.க திமுகவை கண்டு அஞ்சுகிறது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் ட்விட்டர் பதிவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'அண்ணாமலைக்கு பதிலாக சுப்பிரமணிய சுவாமியை தமிழ்நாடு தலைவராக அறிவித்தால் பா.ஜ.க விளங்கும்' எனப் பதிலளித்தார்.

'ஜி 20 இந்தியா தலைமை: பாஜகவின் திறமையால் கிடைத்தது என்பது பொய்'

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் குறித்த கேள்விக்கு, 'தமிழ்நாடு காங்கிரஸில் 5 ஆண்டுகள் பதவியில் இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பிருக்காது என தற்காலிக தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி மீண்டும் பழைய ஆட்களுக்கு வாய்ப்பிருக்காது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.