நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ஹெச்.ராஜாவின் வீடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், மது ஒழிப்பிற்காக போராடிவரும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி வாக்கு இயந்திரத்தில் குளறுபடி இருப்பதாகக் கூறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். பின்பு ஹெச்.ராஜாவின் தூண்டுதலின் பேரில் பாஜகவினர் நந்தினியின் மீதும் அவரது தந்தையின் மீதும் பாஜகவினர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தனுடன் இணைந்து ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்றார்.
இதனையடுத்து காவல் துறையினர் நந்தினியையும், ஆனந்தனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.