ETV Bharat / state

2 அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிவைத்த ஸ்டாலின்!

சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தொல்லியல் இடங்களில் அகழாய்வு
தொல்லியல் இடங்களில் அகழாய்வு
author img

By

Published : Feb 11, 2022, 3:04 PM IST

சென்னை: மு.க. ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 11) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022ஆம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

மேலும், இந்த நிதியாண்டியில் ஐந்து கோடி ரூபாய் நிதியில் மேற்படி ஏழு தொல்லியல் அகழாய்வுகள், இரண்டு கள ஆய்வுகள், சங்க கால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும். அண்மைக் காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழ்நாட்டின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது.

தொல்லியல் இடங்களில் அகழாய்வு

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,

1. கீழடி, அதனைச் சுற்றியுள்ள இடங்கள் (கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம்
2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம்
3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம் - இரண்டாம் கட்டம்
4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் - இரண்டாம் கட்டம்
5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம்
6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - முதல் கட்டம்
7. பெரும்பாலை, தருமபுரி மாவட்டம் - முதல் கட்டம்

ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனவரி 20ஆம் தேதி அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க,

கீழடி

கீழடி அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சி, மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக விளங்கும் அரிய தொல்பொருள்கள், உள்நாடு, வெளிநாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு கொண்டதற்கான கூடுதல் சான்றுகளைத் தேடியும், நகர நாகரிகக் கூறுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த எட்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும்.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி
சிவகளை
தண் பொருநை ஆற்றங்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதிசெய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

மயிலாடும்பாறை

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்விலும் அவற்றில் கிடைக்கக் கூடிய தொல்பொருள்களுக்கும், வரட்டனபள்ளி, கப்பலவாடி போன்ற ஊர்களிலும் கண்டறியப்பட்டதன் வாயிலாகப் புதிய கற்கால மனிதர்கள் தங்களது வேளாண்மை நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர் என்பதனை நிரூபிக்கச் சான்றாக இத்தளம் அமையும்.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

கங்கைகொண்டசோழபுரம்

சோழப்பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தின் நகரமைப்பு, மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினைத் தெரிந்துகொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

துலுக்கர்பட்டி

திருநெல்வேலியில் உள்ள இந்த துலுக்கர்பட்டி அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை, தொல்பொருள்களின் தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதாகும். நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும்.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

வெம்பக்கோட்டை
விருதுநகரில் உள்ள வெம்பக்கோட்டை அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகளைச் சேகரிப்பதாகும்.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

பெரும்பாலை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இந்த பெரும்பாலை அகழ்வாய்வில் பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது நோக்கமாகும்.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

கீழடி அகழாய்வானது கங்கைச் சமவெளியில் நிலவியது போன்ற நகர நாகரிகம் மட்டுமின்றி படிப்பறிவும் எழுத்தறிவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே நிலவியது என்பதை நிலைநிறுத்தியுள்ளது. ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய தொன்மைவாய்ந்த ஊர்களைப் பெற்றுள்ள தண் பொருநை ஆற்றங்கரை (தாமிரபரணி) நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற உமி நீங்கிய நெல்மணிகளின் வழிப் பெறப்பட்ட காலக் கணக்கீடு நிலைநிறுத்தியுள்ளது.

இரண்டு அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

இந்நிதியாண்டியில் ஐந்து கோடி ரூபாய் நிதியில் மேற்படி ஏழு தொல்லியல் அகழாய்வுகள், இரண்டு கள ஆய்வுகள், சங்க கால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சியில், சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி. சந்தர மோகன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கல் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: மின்சார ஊழியர்கள் குடியிருப்புப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை - விரட்டும் பணியில் வனத்துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.