ETV Bharat / state

பெண்ணை கொலை செய்ய முயற்சி: 6 பேருக்கு சிறை!

author img

By

Published : Apr 23, 2019, 9:21 PM IST

சிவகங்கை: முன் விரோதம் காரணமாக பெண்ணை கொலை செய்ய முயன்றதாக இரண்டு பெண் உள்பட ஆறு பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் கருப்பசாமி என்ற செந்தில், ஆனந்த். இந்நிலையில், ஆனந்திற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கும் 2013ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆனந்த் அவரது தந்தை சோனைமுத்து, தாயார் சேது அம்மாள் ஆகியோர் தாக்கியதில் முத்தையா இறந்து போனார். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் 2013ஆம் ஆண்டு செட்டிகுளத்தில் உள்ள கருப்பசாமி வீட்டில் இருந்த சேது அம்மாளை, இறந்து போன முத்தையாவின் மகன்கள் சோனையதேவன் (32), கருப்பசாமி (29), வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணுச்சாமி (37), வேலுார் கிராமத்தைச் சேர்ந்த வேங்கை (30) மற்றும் மகள்கள் சித்ரா, ஆறுமுகம் அம்மாள் ஆகிய ஆறு பேர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சேது அம்மாள் பலத்த காயமடைந்தார்.

தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்து அவர்கள் மீது சிவகங்கை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த தலைமை குற்றவியல் நீதிபதி ராதிகா குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,250 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

சிவகங்கை.  ஆனந்த்
ஏப்ரல்.23

பெண்ணை கொலை செய்ய முயன்ற
2 பெண் உள்பட 6 பேர்களுக்கு 7 ஆண்டு சிறை

சிவகங்கை: முன் விரோதத்தில் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக 2 பெண் உள்பட 6 பேர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த செட்டிகுளத்தை சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் கருப்பசாமி என்ற செந்தில் மற்றும் ஆனந்த். 
ஆனந்திற்கும் அதே கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவருக்கும் கடந்த 2013 ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆனந்த் அவரது தந்தை சோனைமுத்து தாயார் சேதுஅம்மாள் ஆகியோர்  தாக்கியதில் முத்தையா இறந்து போனார். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு செட்டிகுளத்தில் உள்ள கருப்பசாமி வீட்டில் இருந்த சேது அம்மாளை இறந்து போன முத்தையாவின் மகன்கள் சோனையதேவன் (32), கருப்பசாமி (29) மற்றும் வி.புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த கண்ணுச்சாமி (37), வேலுார் கிராமத்தை சேர்ந்த வேங்கை (30) மற்றும் சித்ரா,  ஆறுமுகம் அம்மாள் ஆகிய 6  பேர்கள் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த சேது அம்மாள் சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.
இது தொடர்பாக சிப்காட் போலீசார் 6 பேர்களை கைது செய்து அவர்கள் மீது சிவகங்கையில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த தலைமை குற்றவியல் நீதிபதி ராதிகா குற்றம்சாட்டபட்ட 2 பெண்கள் உள்பட 6 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.1,250 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.