ETV Bharat / state

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் - டி.டிவி தினகரன் - இருண்ட தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடலா

author img

By

Published : Jun 5, 2022, 2:29 PM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மானாமதுரை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன் 7ஆவது வார்டில் கட்சி கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எதிர்க்கட்சி யார் என்ற அதிமுகவினர் கூறிவரும் கருத்துக்கு பதில் அளித்த டிடிவி தினகரன் அட்டகத்தி வீரர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல்- டிடிவி தினகரன்

அரசாங்க மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை. தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார்.

திராவிட மாடல் என்றால் என்ன, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் என்று சொல்கிறாரா?. இந்த ஆட்சியில், காரணம் பழனிசாமி கம்பெனி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் வருகிறது.

விடியல் அரசு, தமிழ்நாடு விடியப் போகிறது என்றும் சொன்னார்கள், ஆனால் இன்று இருண்ட தமிழ்நாடு தான், திமுக எப்போது வந்தாலும் தமிழ்நாடு இருளும். இருண்ட தமிழ்நாடு தான் உருவாகி இருக்கிறது. இந்த ஆட்சி தடுமாறுகிறது. மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் இடஒதுக்கீடு மீறல் - எம்பி சு வெங்கடேசன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.