சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்காபுரி பட்டணம் பகுதியில் உள்ள வனபத்ர காளியம்மன் கோயில் பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து ஆறு அடி நீளமுள்ள பாம்பை மீன் வெட்டுவதை போல் வெட்டி சமையல் செய்து சாப்பிட்டனர். இதனை செல்போனில் வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த வீடியோ மேட்டூர் பகுதிகளில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக பாம்பை சமையல் செய்து சாப்பிட்ட இளைஞர்களை வலைவீசி தேடினர். மேலும், மேட்டூர் வனச்சரக அலுவலர் பிரகாஷ் குமார் தலைமையில் சென்ற வனத்துறை அலுவலர்கள், சுரேஷ்(30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வன பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் சமூக விரோதிகள் தினமும் அமர்ந்து மது அருந்துவது, சீட்டாடுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 70 அடி பாஜக கொடிக்கம்பம் இரவோடு இரவாக இடித்து அகற்றம்!