சேலம்: குமாரசாமிப்பட்டி பகுதியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் தங்கியுள்ள பிரதாப் என்பவர் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.
இந்த நிலையில் பிரதாப் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நடேசனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வீட்டில் யாரும் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை எனவும் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்கவும் என்று கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குடியிருப்பின் உரிமையாளர் நடேசன், அவரது வீட்டின் அருகே சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியது.
இதனையடுத்து நடேசன் அஸ்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவலர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது நடத்திய சோதனையில் சூட்கேசில், கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது.
இதனை அடுத்து காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் வடமாநில பெண் தேஜ்மண்டல், இவரது கணவர் பிரதாப் சென்னையில் வேலை பார்த்துவருகிறார். இவர் மூன்று இடங்களில் அழகு நிலையம் நடத்திவந்தார். இவரது அழகு நிலையத்தில் பாலியல் நடைபெற்றதாக தேஜ்மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
மேலும் அப்பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!