ETV Bharat / state

'குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும்' - ஆட்சியர் ரோஹிணி - தமிழ்நாடு

சேலம்: குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகம் உறுதி பூண்டு செயல்படுவதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

salem
author img

By

Published : Jun 12, 2019, 2:24 PM IST

உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் குழந்தைகள் கலந்துகொண்டு பிரமாண்ட பேனரில் கைரேகை பதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் விழிப்புணர்வு கைரேகை பதித்தார். பின்னர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆட்சியர் ரோகிணி, 'சேலம் மாவட்டத்தில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் நிலையங்கள், வெள்ளி பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் கூடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் ரோஹிணி பேட்டி

ஏதேனும் ஒரு தொழிற்கூடத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பணியாற்றுவது தெரிந்தால் அந்தத் தொழிற்கூட உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாவட்டமாக சேலத்தை மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி, 'வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீட்கப்பட்டு கல்வி பெற்று முன்னேற மாவட்ட நிர்வாகம் உதவிகள் வழங்கிவருகிறது. அவர்களின் பெற்றோருக்கும் 100 நாள் வேலைத்திட்டம் , சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் ஆகியவற்றின் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது' என்று அவர் தெரிவித்தார்.

Intro:குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகம் உறுதி பூண்டு செயல்படுவதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

Body:உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சேலத்தில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் நிகழ்வுகள் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வலியுறுத்தும் வகையில் பிரமாண்ட பேனரில் கைரேகை பதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் விழிப்புணர்வு கைரேகை பதித்தார். பின்னர் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆட்சியர் ரோகிணி கூறும்போது, " சேலம் மாவட்டத்தில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் நிலையங்கள், வெள்ளி பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் கூடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு தொழிற்கூடத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பணியாற்றுவது தெரிந்தால் அந்த தொழிற்கூட உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டமாக சேலத்தை மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய," ஆட்சியர் ரோகிணி வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீட்கப்பட்டு கல்வி பெற்று முன்னேற மாவட்ட நிர்வாகம் உதவிகள் வழங்கி வருகிறது.

அவர்களின் பெற்றோருக்கும் 100 நாள் வேலைத்திட்டம் , சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் ஆகியவற்றின் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது" என்று தெரிவித்தார்.

Conclusion:முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.