ETV Bharat / state

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்! எப்போது வரை கிடைக்கும்? முழு விவரம் உள்ளே! - PONGAL RATION GIFT DATE

சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

சென்னை: தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையானது தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (9.1.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "வைரசுடன் வாழ பழகிக் கொள்ள நிபுணர்களே அறிவுரை".. HMPV வைரஸ் குறித்து சபையில் அமைச்சர் மா.சு. அசத்தல் பதில்!

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் மூலம், ரூ.249.76 கோடி செலவில் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். மேலும், பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக்கடைகளில் இன்று (9.1.2025) முதல் (13.1.2025) வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையைச் சேர்ந்த சுமார் 50,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.