சேலத்தில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தங்கள் கால்நடைகளை வளர்க்க இடமில்லை எனக் கூறியும் அப்பகுதி மக்கள் ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு இன்று (நவ.23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.