சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள அமராவதி நகரில் தனியார் குடிநீர் ஆலைகள் இயங்கிவருகின்றன. அந்த ஆலைகளிலிருந்து விற்பனைக்காக கொண்டுச் செல்லப்படும் குடிநீர் கேன்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன் பேரில், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, அமராவதி நகர் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இன்று சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு கணேசன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றியும், முறையான அனுமதி பெறாமலும் குடிநீர் ஆலை நடத்தி வந்தது தெரியவந்தது. அதேபோல், எந்த ஆவணமுமின்றி அமராவதி நகரில் உள்ள மற்றொரு குடிநீர் ஆலையும் செயல்பட்டு வந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து இரு ஆலைகளுக்கும் அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் ஜவுளி கடைகளுக்கு சீல்!