ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் கார் விபத்து; இருவர் காயம்! - சேலம் அண்மைச் செய்திகள்

திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த திருச்சி மாவட்ட ஆட்சியரின் கார் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.

கார் விபத்து
கார் விபத்து
author img

By

Published : Sep 3, 2021, 12:39 PM IST

சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியராக பணிபுரிபவர் சிவராசு. இவர் நேற்று (செப்.2) சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவில் மீண்டும் திருச்சி நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது நாமக்கல்லிலிருந்து சேலத்திற்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி, சேலம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் மினிலாரி
தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் மினிலாரி

மினிலாரி மீது மோதிய கார்

பின்னர் மினிலாரி அங்கிருந்த தடுப்பு சுவர் மீது மோதி மாவட்ட ஆட்சியரின் கார் வந்து கொண்டிருந்த எதிர்திசை சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

அப்போது அந்த வழியில் வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்ட ஆட்சியரின் கார் மினிலாரி மோதி நொறுங்கியது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

அதேசமயம் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநர் சீனிவாசன், உதவியாளர் பெரியண்ணன்சாமி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிசிடிவி மூலம் சிக்கிய கோழி திருடர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.